வல்லநாடு அரசு கிளை நூலகத்தில் உலக புத்தக தினவிழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அரசு கிளை நூலகத்தில் உலக புத்தக தினவிழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்தலைவர் இசக்கி தலைமை வகித்தார். நூலகர் தளவாய் வரவேற்புரை ஆற்றினார். வல்லநாடு ஆசிரியை மேரி ரெஜினா, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் முத்து, பொதுப்பணித்துறை சுப்பையா, ஆசிரியை சுப்புலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நூலகர் தளவாய் நன்றி கூறினார்.


