குருஸ் பர்னாந்து
ஐந்து முறை தாத்துக்குடி நகரமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட செயல்திறம் கொண்ட சிற்பி ராவ்பகதூர் குரூஸ் பெர்னாண்ட்.
தூத்துக்குடியில் வாழ்ந்த ஜான்சாந்தகுரூஸ் பெர்னாண்டஸ் தம்பதிகளுக்கு மகனாய் 15.11.1869 -இல் பிறந்தவர் குரூஸ்பெர்னாண்ட்ஸ். தூய சவேரியார் பள்ளியில் அன்றைய மெட்ரிகுலேசன் படிப்பை 1885இல் முடித்தார். முதலில் சர்தார் சேட்டிடமும். பின்னர் வால்காட் நிறுவனத்திலும் எழுத்தராக பணியமர்ந்தார். வால்காட் பஞ்சுக் கம்பெனியில் வரும் வருமானத்தினை சேர்த்து ஏழைப்பிள்ளைகளின் கல்விக்காகச் செலவழித்தவர் குருஸ் பெர்னாண்டஸ். கம்பெனியின் தூசுகளின் விளைவுதான் இளமையிலேயே அவரைப் பற்றிக் கொண்டது “ஆஸ்துமா” . தொபியால்அம்மாளை மணந்து இல்லறம் நடத்தி, ஏழு குழந்தைகளின் தந்தையானார். தமது கடின, உழைப்பினால் வால்கார்டு நிறுவனத்தில் ராலி ஆபீஸ் புரோக்கராகவும், பின்னாளில் மேலாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.
பொதுத்தொண்டில் பெரிதும் ஈடுபாடு கொண்டு விளங்கிய குருஸ்பெர்னாண்டஸ் 21.12.1909இல் தூத்துக்குடி நகராட்சித்தலைவராகப் பொறுப்பேற்ற போது. தூத்துக்குடி மக்கள் சுத்தமற்ற கிணற்றுக் குடிநீரத்தான் குடிக்கவும் சமையலுக்கும் பயன்படுத்தி வந்தனர். அப்பொழுதெல்லாம் காலரா ,பிளேக் போன்ற நோய்கள் நகரில் சர்வசாதாரணம். தினமும் வியாதிகளால் உயிர்ப் பலிகளும் ஏராளம்
இத்தகைய மரணங்களுக்கும், நோய்கட்கும் சுகாதரமற்ற -குடிதண்ணீர் தான் காரணம் என்று உணர்ந்து குரூஸ் பெர்னாண்டஸ் சுத்தமான குடிநீர் வழங்கிடுவதே தனது முதற்கடமை எனச்செயல்பட்டார். இலங்கை கொழும்பு துறைமுகத்திலிருந்து 5 கப்பல்கள் மூலம் குடிநீர் கொண்டுவந்து நகர மக்களுக்கு வழங்கினார். இதனால் முழுமையாக குடிநீப்பற்றாக்குறையைத் தீர்க்கமுடியவில்லை. எனவே கடம்பூரிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொணர்ந்து மக்களுக்கு வழங்கினார். ஆனால் ஓர் அறிவிப்புடனே இத்தண்ணீர் வழங்கப்பட்டது. “இந்தத் தண்ணீர் குடிக்க மற்றும் சமைக்க மட்டுமே” என்பதே அந்த அறிவிப்பாகும். இது மட்டுமல்லாது இன்று அவரது சிலையிருக்கும் இடத்திலும், ஊரின் பல பகுதிகளிலும் வட்டத்தெப்பம் மற்றும் வட்டக் கிணறுகள் அமைத்து ஐந்து மைல் தூரத்திலுள்ள கோரம்பள்ளம் குளத்திலிருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வரச்செய்தார். கிணறுகளில் இங்குக்குளிக்கவோ, துவைக்கவோ கூடாது என்று அறிவிக்கச் செய்தார்
தூத்துக்குடி மக்களின் குடிநிர்பிரச்சனைக்கும் தேவைக்கும் நிரந்தரத்தீர்வு காண வேண்டுமே பெர்னாண்டஸ் அவர்களது சிந்தையில் பூத்த வீந்தைத் திட்டம்தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர்த்திட்டம் நிரந்தரமாக, நாள்தோறும், முறையாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் 24மைல் தூரத்தில் ஓடும் தாமிரபரணி ஆற்றுப்படுகையில், வல்லநாடு அருகில் கிணறுகள் தோண்டி, அங்கிருந்து தண்ணீரைப்பெரிய பெரிய குழாய்கள் மூலமாகத் தூத்துக்குடிக்கு கொண்டு வந்து சேமித்து நகரமக்களுக்கு வழங்கும் திட்டம், மக்களிடம் இத்திட்டம் நிறைவேற 355 வரிவசூலித்தபோது, என்றோ வருவதாகச்சொல்லப்படும் திட்டத்திற்கு இன்றே வரி தருவது நியாயம் அல்ல என மறுத்தவர் ஏராளம். எதற்கும் கவலைப்படாமல் எடுத்தகாரியத்தை முடிப்பதில் தீவிரமாகச்செயல்பட்டார் குரூஸ் பெர்னாண்டஸ்.
இத்திட்டத்தைக்குரூஸ் பெர்னாண்டஸ் தூத்துக்குடி, நெல்லை. பாளை நகராட்சிகளின் கூட்டுக்குடி நீர்த்திட்டமாகவே உருவாக்கியிருந்தார். எனவே பாளை நகராட்சிகளும் தொடக்க நாள்களில் தங்களின் பங்களிப்பாக வரி செலுத்தியுள்ளனர். சில மாதங்களு பிறகு திட்டத்தில் இருந்து விலகிக் கொண்டனர். எனவே மொத்த நிதிச்சுமையும் தூத்துக்குடி நகராட்சி தலையில் விழுந்தது. தூத்துக்குடி குடிநீர்த்திட்டம் 18.5 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது . பின் பணி துவங்கியது. ஆனாலும் இதில் மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டது.
முதல் உலகப்போர் காரணமாகத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் 27.05.1919இல் குரூஸ் பொர்னாண்டஸ் தூத்துக்குடி நகராட்சித்தலைவராக நான்காவது முறையாகப் பதவி ஏற்றார். தடைப்பட்டிருந்த தூத்துக்குடி குடிநீர்ட்டத்தை நடைமுறைப்படுத்த பெரும் முயற்சி எடுத்தார்.
திட்டச்செலவு அதிகமாகிப்போனதால் அரசு தயக்கம் காட்டியது. தொடர்ந்து திட்டம் செயல்படாமல் முடங்கிப் போனது. இந்தக்காலக் கட்டத்தில்தான் 1922ஆம் ஆண்டு இராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்களுக்கான கிறிஸ்தவப் பிரதிநிதியாக சென்னை மாகாண சட்ட மேலவைக்கு குரூஸ்பெர்னாண்டஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவி மூலம் தமது கனவுத்திட்டமான தூத்துக்குடி குடிநித்திட்டத்திற்கு மீண்டும் உயிர்தரப் பயன்படுத்தினார்.
இன்று தூத்துககுடிககு தாமிரபரணி திட்டம் செயல்படுகிறது என்றால் அதற்கு விதை போட்டவர் குருஸ் பர்ணான்டஸ் தான்.
ஊருக்கு மத்தியில் தரிசு நிலமாகக் கிடந்த இடத்தை 1920 இல் பண்படுத்தி சனிக்கிழமை சந்தை எனப்பெயரிட்டு, வியாபாரிகளை அழைத்து வந்து கடைகள் போட வைத்து வியாபாரம் செய்திட வகை செய்தார்.
சுமார் 100ஆண்டுகட்கு முன்னர் தூத்துக்குடி நகராட்சி அலுவலகம் பழைய துறைமுகம் அருகிலுள்ள சென்டிரல் ஸ்டோர் இருக்கும் இடத்தில் வாடகைக்கு இருந்தது. பின்னர் அங்கிருந்து சத்திரம் தெருவில் நகராட்சியள்ளி இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் சிவன்கோவில்அருகிலுள்ள நகராட்சி மண்டபமிருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. குருஸ்பொனாண்டஸ் நகராட்சித்தலைவராக இருந்தபோது, இன்று கிழக்குமண்டலஅலுவலகம் உள்ள இடம் (கிரேட் காட்டன் ரோட்டில்) அரசு புறம்போக்கு நிலமாக இருந்தது. அரசு சார்பில் அந்த இடத்தை ஏலம் விட ஏற்பாடாகியது. அன்றைய நகராட்சி மேலாளர் குருஸ் பெர்னாண்டஸிடம் இதனைத்தெரிவித்தார். இருவரும் ஆலோசனை செய்தனர். உடனடியாக அன்றைய திருநெல்வேலி மாவட்டஆட்சியர் அனுமதி பெற்று ஏலத்தைத்தடுத்து நிறுத்தி, அந்த இடத்தை நகராட்சிக் கட்டடம் கட்ட அரசிடம் இருந்து ‘பெற்றுத்தந்த பெருமை குரூஸ் பெர்னாண்டஸ் அவர்களையே சாரும்.
ஏழை மக்கள் மீளாக்கடன் துயரிலிருந்து மீளவும், சொந்த வீடு கட்டவும் 1912 இல் கூட்டுறவு வங்கியை உருவாக்கியவர் குரூஸ் பொனாண்டஸ். இத்தகைய சேவைகளைப் பாராட்டியே அரசு அவருக்குத்தங்கப்பதக்கம் அளித்து, ராவ்சாகிப், ராவ் பகதூர் ஆகிய பட்டங்கள் தந்து கௌரவப்படுத்தியது.
ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந் 15.11.1869 ஆம் ஆண்டு முத்துகுழித்துறையில் ஜான் சாந்த குரூஸ் பர்னாந்து இரண்டாவது மகனாக பிறந்தார். மெட்ரிகுலேசன் பரீட்சையில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர். செல்விஜர் துரை வெகு புகழுடன் விளங்கிய வால்கார்ட் கம்பெனியின் பொறுப்பாளர். துரையின் அந்தரங்க காரியதரிசியாக முதலில் வேலைக்கு அமர்ந்தார். அந்த துரையின் சிபாரிசின் பேரில் Ôராலி பிரதர்ஸ்Õ கம்பெனியில் சேர்ந்து பணியாற்றினார். உழைப்பால் உயர்ந்தவர் உத்தமர். அறிவுக் கூர்மையும் திறமையும் மிக்கவர். எந்த எதிர்ப்பு வந்தாலும், தான் செய்யக் கூடிய காரியம் வெற்றிப்படப்பட்டர்
தமது மதினியாரின் இளைய சகோதரியான தொபியாங் அம்மாள் பர்னாந்துவை திருமணம் செய்து இல்லறத்தை செம்மையுடன் நடத்தி 4 ஆண் பிள்ளைகளையும், 3 பெண் பிள்ளைகளையும் பெற்றார்.
, சமுதாயம் தந்த தவப்புதல்வன், நல்ல சமுதாயத் தண்ணீர் அருளியவர். பொதுநல உழைப்பில் இவருக்குள்ள பற்றும் , குறிக்கோள்களும் இவரை சமுதாய தொண்டனாக்கியது. நகரமன்ற தலைவர் ஆனார். 30 ஆண்கள் (நீண்டகாலம்) பதவியில் இருந்தவர்.
-தொடர்ந்து 5 முறை தூத்துக்குடி நகர தந்தை -1922 இராமநாதபுரம் திருநெல்வேலி ஜில்லா சென்னை சட்டமன்ற பிரதிநிதி. -தூத்துக்குடியில் “பேபிஹோம்” நிறுவனர். -1012 கூட்டுறவு வங்கி நிறுவனர். தலைவர். -1915 அரசு நிலத்தை ஏலத்தில் எடுத்து தூத்துக்குடி நகர சபைக்கு இலவசமாக வழங்கினார். -1925 முதல் முறையாக வல்லநாடு பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்தவர். வாங்கிய பட்டம்: ராவ் சாகிப், ராவ் பகதூர். இன்று தூத்துக்குடி மாபெரும் மாநகரமாவதற்கு . குரூஸ் பர்னாந்து தான் காரணம். ஆதலால் தூத்துக்குடி “மக்களின் தந்தை” என போற்றப்பட்டவர்.
02:11.1914 அன்று தூத்துக்குடி நகரின் வெளியே மேற்குப்பகுதியில் 30 ஏக்கள் நிலப்பரப்பைச்சமப்படுத்தி 12 சாதியினருக்குமான ஒரு மயான பூமியை உருவாக்கித்தந்தவர் குரூஸ் பெர்னாண்டஸ். மயான பூமியை வரிசையாக அமைத்தார்கள். அதுது இன்று மையவாடி என்று அழைக்கப்படுகிறது. குரூஸ்பெர்னாண்டஸ் சொன்னபடி, அவரது பூதவுடலும் அங்கேயே புதைக்கப்பட்டுள்ளது .


