தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் தூய சவேரியார் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்றைய தினம் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்ட பயிற்சி நடந்தது.
கல்லூரி தாளாளர் ஸ்டிபன் ஆலோசனையின் பேரில் இந்த பயிற்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் வரவேற்புரை ஆற்றினார். வேண்டும் ஒரு சாமர்த்தியம் என்ற தலைப்பில் திருச்சி தன்முனைப்பு சிறப்பு பேச்சாளர் வாசு சிறப்புரை ஆற்றினார். கல்லூரி மூத்த விரிவுரையாளர் பென் மேத்யூ நன்றி கூறினார்.
இந்த பயிற்சியில் கல்லூரி துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் ஆய்வக போதகர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


