செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் உலக புத்தக தினவிழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். வாசகர் வட்ட முன்னாள் தலைவர் ஜுவா, ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் லெட்சுமண குமார் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி நடந்தது. இதை மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். செய்துங்கநல்லூர் எம்.எம். நடுநிலைப்பள்ளி, ஜோஸ் பள்ளி மாணவ மாணவர்கள் ஓவிய போட்டியில் கலந்துகொண்டனர். சிறந்த ஓவியத்துக்கு பரிசு வழங்கப்பட்டது. எம்.எம். நடுநிலைப்பள்ளி ஆசிரியை மல்லிகா, ரபூக், மகேஷ், நடராஜன், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


