https://www.facebook.com/muthalankurichi.kamaraj/
வருகிற ஞாயிற்று கிழமை 5 மணிக்கு பீனிக்ஸ் மனிதர்கள் நிகழ்ச்சியில் என்னை பற்றி (முத்தாலங்குறிச்சி காமராசு) ஒளிபரப்பு செய்கிறார்கள். பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி, பல பயணங்கள் மேற்கொண்டு, தாமிரபரணி, மலை பயணம், சித்தர்கள், ஜமீன்தார்கள் என பல விசேஷங்களை இந்த உலகிற்கு காட்டிய வகைக்காகவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பாக வழக்கு தொடர்ந்தது உள்பட பல்வேறு நிகழ்வுகள் எப்படி நடந்தது என செய்தி வாசிப்பாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தொடுக்கும் கேள்விக்கு பதிலளிக்கிறார் முத்தாலங்குறிச்சி காமராசு. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நீயூஸ் 7 நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன், தலைமை செய்தி ஆசிரியர் கோசல்ராம், நிகழ்ச்சி தலைமையாளர் சண்முகம், நேர் முகம் கண்ட தம்பி கோபாலகிருஷ்ணன், நிகழ்ச்சி இயக்குனர் கேசவன், கேமரா மேன் திரு. நெப்போலியன்,பிரபு, உள்ளீட்டு பிரிவு செய்தியாளர் செம்மல், தென்மண்டல நிருபர் தம்பி சுடலை குமார், தம்பி சுடலை மணி செல்வன் உள்பட உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த சிறப்பு டிரைலருக்கு குரல் கொடுத்து அனைவரையும் ஈர்த்த சண்முகம் அய்யாவுக்கு மிக்க நன்றி. மறந்து விடாதீர்கள் . ஞாயிறு மாலை 5 மணிக்கு பீனிக்ஸ் மனிதர்கள் காணத்தவறாதீர்கள்.


