தூத்துக்குடி மாவட்டம் இந்திய விடுதலைப்போராட்டத்தில் பெரும்பங்காற்றியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை வீரத்தின் விளைநிலம் என்று சொல்லலாம். தூத்துக்குடியில் திலகர் வழியில் தீவிரவாதப் போராட்டமும், காந்திய வழியில் அறவழிப்போராட்டமும் நடந்துள்ளது. இம்மாவட்டத்தின் விடுதலைப் போராட்டத்தலைவர்களான வீரபாண்டியகட்டபொம்மன், வ.உ.சிதம்பரம், முண்டாசுக்கவிஞன் பாரதி போன்றோரின் தியாகம் நிறைந்த வாழ்வை உலகமறியும், பலரால் அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய செய்திகளை இப்பகுதி வெளிக்கொணர்கிறது. ஊமைத்துரையுடன் தூத்துக்குடித்தலைவர்கள் வெள்ளை ஏகாதிபத்திய அரசுக்கு எதிராகப்போராடிய கட்டபொம்மன் சுயத்தாரில் தூக்கிலிடப்பட்டார். தம்பி ஊமைத்துரை பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரை மக்களைத்திரட்டி மீண்டும் பாஞ்சாலங்குறிச்சிக்கோட்டையைக் கட்டி முடித்தார்.
வெள்ளையரை எதிர்த்துப்போரிட, ஆயுத உதவி அளிக்குமாறு அன்றைய தூத்துக்குடியின் சாதித்தலைவனார் டான் கேப்ரியல் தெக்குஸ் வாஸ்கோம்ஸ் உதவியை நாடினார் ஊமைத்துரை, தென் தமிழகத்தின் கடற்கரையோரங்களில் வாழ்ந்த பரவர்களின் தலைவரே ‘சாதித் தலைவனார்’ என அழைக்கப்பட்டார். சாதித்தலைவனார் டான்கேப்ரியல், ஊமைத்துரை, திருநெல்வேலி நாகராஜ மணியக்காரர், இராமநாதபுரம் மயிலப்பன் போன்றோர் காடல்குடியில் ஆலோசித்தனர். இக்கூட்டத்தில்தான் ஆயுத உதவியை அளிக்க டான்கேப்ரியல் ஒத்துக் கொண்டார்.
வெடிமருந்து என்று அழைக்கப்படும். பொட்டாசியம் நைட்ரேட் வெடிமருந்துகளும் ஆயுதங்களும் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக 1801இல் உள்ளிட்ட தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்பட்டுப் பின்னர் அது ஊமைத்துரை வசம் ஒப்படைக்கப்பட்டது. டான்கேப்ரியல் உதவியால் மருது சகோதரர்கள் ராக்கெட் ஏவுகணையை உருவாக்கியுள்ளனர். ஊமைத்துரை, மருது சகோதரர்களின் புரட்சிப்படை ஆங்கில அரசுக்கு எதிராகப் போரிட்டது.பலம் பொருந்திய வெள்ளையர் படையின் தளபதி ஜெனரல் காலின்ஸ் பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றினார். கோட்டையின் உள்ளே தளபதிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஏராளமான நவீன ஆயதங்களும், துப்பாக்கிகளும், வெடிமருந்துகளும், ஏறத்தாழ 12000 வீரர்களின் சடலங்களும் கிடந்துள்ளன. இதுபோன்றே மருது சகோதரர்களிடமும் ஆயுதங்களைப் பார்த்திருக்கிறார் ஆங்கிலேய கானல் அக்னியு.
இந்த ஆயுத உதவியை வழங்கிய டான் கேப்ரியலைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. புரட்சிப்படையின் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். சில வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் பினாங்குத்தீவுக்கு சிறைக்கைதியாக அனுப்பப்பட்டனர். கேப்ரியலைக்கைது செய்தால் தான் புரட்சிப்படையை முற்றிலுமாக அழித்ததாக அமையுமெனக்கருதிய வெள்ளையர், பல சூழ்ச்சிகள் மூலம் அவரைக் கைது செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வியே அடைந்தன. தலைமறைவான டான் கேப்ரியல் தமது 56ஆம் வயதில் மணப்பாட்டில் மரணமடைந்தார்.
மாசிலாமணிப்பிள்ளை
இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் தோன்றிய 1885 இல் தூத்துக்குடி அருகேயுள்ள| கொம்பாடியில் பிறந்தவர் மாசிலாமணிப்பிள்ளை. மரக்கடைத்தொழில் செய்த இவர்; சுதராடையைப் பரப்ப இராட்டினங்களைச் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கினார். தமிழ்,ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்த மாசிலாமணி “சிம்மக்குரலோன்” என அழைக்கப்பட்டார். நேரு, காந்தி போன்ற தலைவர்களின் ஆங்கில உரையை இம்மண்ணில் மொழி பெயர்த்து வழங்கியவர் இவரே.
1930இல் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக ஓராண்டுசிறையும்
ரூ.200 தண்டமும் பெற்றார். இப்போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காகத் தூத்துக்குடி வியாகுலம் பர்னாந்துக்கு ஓராண்டுச் சிறையும், புன்னைக்காயல் செல்லையாவுக்கு நான்கு மாதச்சிறையும்,புன்னைக்காயல் ஈராமியர் பொனாண்டோவிற்கு ஆறு மாதச்சிறையும் கிடைத்தது. தூத்துக்குடி பீட்ட
முராய்சுக்கு இ.பி.கோ. 385 ஆவது பிரிவின் கீழ் 32 மாதச்சிறை வழங்கப்பட்டு, பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
20.01.1941 இல் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தின் முன் தனிநபர் சத்தியாக்கிரகத்தை மாசிலாமணி நடத்தியதால் ஆறுமாதச்சிறையும், ரூ200தண்டமும் விதிக்கப்பட்டார் தண்டம் கட்ட மறுத்துக்கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். காந்தியின் கட்டளையை ஏற்று இரண்டாம் உலகப்போர் எதிர்ப்புப் போராட்டத்தில் 20.01.1941இல் மாசிலாமணியும் அவரது மனைவி ஜெபமணியும் கலந்துகொண்டு கைதாகினர். 1942இல் நடந்த வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் கலந்தமைக்காக விசாரணைக்கைதியாக 214 ஆண்டுகள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். தம் சொந்தச்செல்வில் முதியோர் கல்விப் பள்ளியை நடத்தினர். பெண்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் விளங்கிய ஜெபமணியம்மையும் மாசிலாமணியும் இரட்டைக்குழாய் துப்பாக்கியாய் விடுதலைக்காகப் போராடிச்சிறை சென்றுள்ளனர். தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும், ஜெபமணியம்மையார் இருந்துள்ளார். இத்தம்பதியரின் தியாகம் ஈடு இணையில்லாதது.
பெ.கந்தசாமி பிள்ளை
இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் “பேனாகானா” என்றழைக்கப்பட்ட சந்தசாமிப்பிள்ளை 1892 இல் தூத்துக்குடி மாவட்டத்தின் மீனாட்சிப்பட்டியில் பிறந்தார். வ.உசி. தொடங்கிய சுதேசிக்கப்பல் நிறுவனத்திற்கும், உப்பு வியாபாரி நல்ல பெருமாள் பிள்ளைக்கும் தொடர்பு இருந்தது. உப்பு வியாபாரியிடம் வேலை செய்த கந்தசாமி வ.உசி.யுடன் ஏற்பட்ட நட்பால் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபடலானார். கந்தசாமி 1917இல் மகாத்மா காந்தி சங்கத்தை நிறுவினார். 1921இல் காந்தியடிகள் திருநெல்வேலிக்கு வகுகை தந்த போது அந்நியத் துணிகளை அளித்தும் கதரணியத் தொடங்கினார். கதராடைக் கடையைத் தொடங்கி, ‘அகில பாரத சர்க்கா சங்கம்’ கிளையை நிறுவும் வரை அதனை நடத்தினார். இதனால் கதர் கந்தசாமி எனவும் அழைக்கப்பட்டார்.
1921 இல் பி.எஸ். முத்தையா தூத்துக்குடியில் நிறுவிய தொண்டர் படையில் இணைந்து
மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றுள்ளார். அப்போது முத்துநகரின் வீதியில் சோமயாஜீலு “அச்சமில்லை. அச்சமில்லை” என்று பாரதியின் பாடலைப் பாடிச் சென்றுள்ளார். 1930இல் நடைபெற்ற வேதாரனிய உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டத்திலும், 1931இல் நடந்த கள்ளுக்கடை மறியலிலும், 1932இல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்திலும், 1942இல் நடந்த வெள்ளையேனே வெளியேறு போராட்டத்திலும் பங்கேற்றுப் பலமுறை சிறை சென்றுள்ளார்.
தூத்துக்குடியிலுள்ள மதுரை நூற்பாலை கதவடைப்புச் செய்தபோது அப்போதைய முதல்வர் இராசாசியைச்சந்தித்துக் கதவடைப்பு சட்டவிரோதம் என அறிவிக்கச்செய்து தொழிலாளர் நலனுக்காகப்பாடுபட்டார். தூத்துக்குடி நகர்மன்றத்தின் உறுப்பினராக இருபத்தைந்து ஆண்டுகள் இருந்து மக்கள் பணிபுரிந்துள்ளார். ஏழ்மையில் பிறந்து ஏழ்மையில் வாழ்ந்து, தமது அற்பத்திரண்டாம் வயதில் இயற்கை எய்தினார்.
தியாகி. பொன்னுச்சாமி நாடார்
விடுதலை வேள்வியில், தங்களை ஆகுதிகளாக இட்டவாகள் தூத்துக்குடி மாவட்டத்தில் பலர் இருந்து உள்ளனர். அத்தகையோரில் சி.பொன்னுச்சாமி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.1907 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 22 ஆம் நாள் வெ. சின்னையாநாடார் நாராயணவடிவு ஆகியோருக்கு மகனாகப்பிறந்த சி.பொன்னுச்சாமி, தச்சர் தெரு ஆரம்பப்பள்ளியிலும்,எஸ்.ஏ.வி. உயர்நிலைப்பள்ளியிலும் கல்வி கற்றார். எஸ்.எஎஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களால் பாராட்டப்பெற்றார்.தமது 17ஆம் வயதிலேயே தேச விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். தமது 22ஆம் வயதில் பத்திரகாளியம்மாளை மணந்து கொண்டார். சி.பொன்னுச்சாமி, நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ் வானொலியில் ஆற்றிய உரையைக் கேட்டு தீவிர தேசபக்தரானார். “வருங்கால நிலைமையும், வாலிபர் கடமையும்” என்று தலைப்பில் சி.பொ.ஆற்றிய எழுச்சியுரை அவருக்குச் சிறைத் தண்டனையைப் பெற்றுத் தந்தது. அலிப்பூர் சிறையில் ஆராத்துயருக்கு ஆளானார். இந்தியாவிலேயே முதன்முதலாகத் தேசபக்த நடவடிக்கைக்காத ஆங்கிலேயர் சி.பொ.வின் ரேடியோ லைசென்சைப் பறிமுதல் செய்தனர். நாடு விடுதலை பெற்ற பிறகு தூத்துக்குடி நகர்மன்ற உறுப்பினராகவும் 1962 முதல் 1967 வரை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றினார்.
வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்திற்குத் தமக்குச் சொந்தமான 2 ஏக்கர் 96 சென்ட் நிலத்தைத் தானமாகக் கொடுத்து முன்னோடியாக விளங்கினார். காமராஜ் கல்லூரி, தூத்துக்குடியில் உருவாகிட அயராது பாடுபட்டார். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சிங்களம் எனப் பன்மொழிப் புலமையோடு, மொழிச் சகிப்புத்தன்மைக்கு வித்திட்டார். அஞ்சாநெஞ்சம், அருஞ்சொல்லாற்றல். அன்னை நாட்டின் மீது அளவற்ற அன்பு, மக்கட்தொண்டு, மகத்தான தியாகம் இவையனைத்தும் கம்பீரமான உருவம் கொண்டு வந்தால் அங்கே தியாகி சி.பொன்னுச்சாமி தோற்றம் தருவார்.


