ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டது.
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் மரபுசார் பாரம்பரிய நடைபயணம் வரலாற்றுத் துறை சார்பாக நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் முத்தையா, பள்ளிக்கல்வி அபிவிருத்தி சங்க செயலர் சண்முகநாதன், பள்ளி தலைமையாசிரியர் முத்துசிவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த பயணம் பள்ளியில் தொடங்கி ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் சைவசித்தாந்த கல்லூரியை அடைந்தது. அங்கு மாணவர்களை சுப்பையா வரவேற்றார். அங்கு ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு பற்றிய புகைப்படங்களை மாணவர்கள் கண்டுகளித்தனர்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் பிறந்த பிறந்த இடத்தை மாணவர்கள் பார்வையிட்டார்கள். மேலும் அவரின் வரலாறு பற்றி பள்ளியின் முதுகலை வரலாற்று ஆசிரியர் முத்தையா எடுத்துரைத்தார்.
ஸ்ரீவைகுண்டத்தின் சிறப்புகளை பற்றி வரலாற்று ஆசிரியைகள் லட்சுமி, சித்ரா ஆகியோர் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். அதன்பின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலின் சிறப்புகளை பார்வையிட்டார்கள். கைலாசநாதர் திருக்கோயில் சிறப்புக்களைப் பற்றியும் வீரபாண்டிய கட்டபொம்மன் இப்பகுதிகளில் தங்கியிருந்தது பற்றியும் ஆசிரியர் குப்புசாமி விளக்கி கூறினார்.
விழா நிறைவில் ஆசிரியர் மாணிக்கம் நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பலர் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.


