ஸ்ரீவைகுண்டம் ரயில்வே கண்காணிப்பாளர் கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
கடந்த 16.01.2022 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி திருச்செந்தூர் மெயின்ரோடு பகுதியிலுள்ள கால்வாய் ஊரின் பாலத்திற்கு அருகில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஸ்ரீவைகுண்டம் ரயில்வே கண்காணிப்பாளராக பணியாற்றிய கேடிசி நகரைச் சேர்ந்த செந்தாமரைகண்ணன் என்பவரை விபத்து போன்று காரால் ஏற்றி கொலை செய்த வழக்கில் பக்கப்பட்டி வேல்முருகன் மார்த்தாண்டன், முத்தாரம்மாள்புரம் மகேஷ்பாபு, பார்வதியம்மாள்புரம் கந்தகுமார், கலியாவூர் சுடலைமணி, மூலிக்குளம் ஜெகன் (எ) ஜெகன் பாண்டியன் ஆகிய 5 பேரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் 5 குற்றவாளிகள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் மாவட்ட எஸ்பிக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட எஸ்பி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பக்கப்பட்டி வேல்முருகன் மார்த்தாண்டன், முத்தாரம்மாள்புரம் மகேஷ்பாபு, பார்வதியம்மாள்புரம் கந்தகுமார், கலியாவூர் சுடலைமணி, மூலிக்குளம் ஜெகன் (எ) ஜெகன் பாண்டியன் ஆகிய 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.


