செய்துங்கநல்லூர் வருகை புரிந்த பாண்டிச்சேரி மாநில அரசு செயலாளர் சுந்தரேசன் துரைப்பாண்டியன் அவர்களுக்கு பொருநை ஆதிச்சநல்லூர் தொல்லியல் நிறுவனம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தூத்துக்குடி காமராஜர் கல்லூர் துணைப்பேராசிரியர் அபிஷ்விக்னேஷ், நியூஸ் 7 தொலைக்காட்சி ஸ்ரீவைகுண்டம் நிருபர் சுடலை மணிச்செல்வன் ஆகியோர் வரவேற்றனர். அவருக்கு தாமிரபரணி பெருமையை கூறும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நவீன தாமிபரணி மகாத்மியம் என்னும் நூல் வழக்கப்பட்டது. அதன் பின் அவர் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தார்.


