முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித் தொகைக்காக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய முப்படைவீரர் வாரியம் புதுதில்லி வாயிலாக முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைத் திட்டம் 2021-2022-ம் ஆண்டிற்கு(PM Scholarship)அலுவலர் பதவிக்குகீழ் துஊழு பதவி வரை பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு நடப்புகல்வி ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் “ஆன்லைன்” மூலம் விண்ணப்பிக்கலாம்.
பன்னிரண்டாம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்றமாணவர்கள் அல்லது அதற்கு அதிகமாக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்ற,தொழிற்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலும்.இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் 31.12.2021 வரை விண்ணப்பித்திட தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 31.01.2022 வரை விண்ணப்பித்திட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே தகுதியானவர்கள் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் அனைத்து அசல் ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்திற்கு நேரில் வர அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


