தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகளிடம் அதே பகுதியைச் சேர்ந்த மளிகை கடை நடத்தி வரும் யோவான் என்பவர் ஆபாசமாக நடந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், சிறுமிகள் கடைக்கு வரும் போது அவர்கள் முன்னால் சுயஇன்பத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து அந்த சிறுமிகள் தங்களது பெற்றோர் இடத்தில் கூறிய நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த சிறுமி மளிகை கடைக்காரர் யோவான் கடைக்கு சாமான் வாங்க சென்றுள்ளனர். அப்போது சிறுமிகள் முன்பு யோவான் சுய இன்பத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை அங்கு சென்ற சிறுமிகள் ரகசியமாக வீடியோ எடுத்து அதனை தங்களது பெற்றோருக்கு தெரிவித்த நிலையில் அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு காமக்கொடூரன் யோவான் என்பவரை நாசரேத் காவல் ஆய்வாளர் பட்டாணி யோவானை பிடித்து விசாரணை நடத்தி மேல் விசாரணைக்காக திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அங்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் யோவானிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


