ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக அகழாய்வு நடந்து வருகிறது. குளிர்காலத்தில் நடைபெறும் இந்த ஆய்வு தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. திருச்சி மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் நடைபெறும் இந்த அகழாய்வில் ஆய்வாளர்கள் எதீஸ்குமார், முத்துகுமார், வரைவாளர் ராகவேந்திரா குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த அகாழ்யவு பணியை நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் நேரில் வந்து பார்த்தவண்ணம் உள்ளனர். இதற்கிடையில் தேனி தமிழ்சங்க நிர்வாகி எழுத்தாளர் தேனி சுப்பிரமணியன் தலைமையில் ஆதிச்சநல்லூர் வந்தார்கள். அவர்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். அகழாய்வு பணியை ஆய்வளார் அருண் விளக்கினார். அவருடன் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரிப் பேராசிரியர் முது முனைவர் ஐயப்பன், பண்டாரப்பட்டி டி.டி.டி.ஏ துவ க் கப்பள்ளி தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், தெற்குகாரசேரி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு. உள்பட பலர் கலந்துகொண்டனர்.


