மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் நடந்த ஓமைக்ரான் மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாமில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள காந்திநகரில் தனியார் திருமண மண்டபத்தில் மதர் சமூக சேவை நிறுவனம், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
முகாமிற்கு வருகை தந்தவர்களை லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி வரவேற்றார்.
நேரு யுவகேந்திரா அலுவலர் இசக்கி முன்னிலை வகித்தார்.முகாமிற்கு
சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் மாவட்ட சுகாதார சபை ஏற்பாட்டுக் குழு உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கி விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்.இதில் கூறியதாவது “உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ஓமைக்ரான் வைரஸை நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டு முயற்சி வாயிலாகத்ததான் முறியடிக்க முடியும் “
நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றுக்கு எதிரான போரை சந்தித்து வருகிறோம். உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராக நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.கொரோனா வின் புதிய உருவமான ஓமைக்ரான் நம் அனைவரையும் தாக்க துவங்கியுள்ளது. அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த பெருந்தொற்றை வீழ்த்த நம் மக்களின் ஒற்றுமையான முயற்சி மிக முக்கியமானது. இந்த ஓமைக்ரான் குறித்து நம் நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.தோற்றை எதிர்கொள்ள சுய கட்டுப்பாடுட்னும்,,விழிப்புணர்வுடனும், நம் ஒற்றுமை பலத்தால் தான் ஓமைக்ரானை வீழ்த்த முடியும்.இந்த நம்பிக்கையுடனும், பொறுப்புடனும்,இந்த கடினமான தருணங்களில் நாம் அனைவரும் ஒரு குடும்பம் போல் ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும். இதுதான் நம் பலம்.இது தான் எந்த சவாலையும் நம்மால் வெற்றிகரமாக எதிர்கொள்ள வைக்கிறது. நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் மேலும் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.என டாக்டர் எஸ் ஜே கென்னடி கூறினார்.முடிவில் மதர் சமூக சேவை நிறுவன அலுவலர் விஷ்ணு பிரியன் நன்றி கூறினார்.இதனைத் தொடர்ந்து ஓமைக்ரானை மற்றும் கொரோனா தடுக்க, உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அனைவருக்கும் கபசுர குடிநீர், முக கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதில் மதர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பனை தொழிலாளர்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், மதர் வள்ளியம்மாள் மகளிர் குழுக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்


