ஆறாம்பண்ணையில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு முகாம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை கிராமத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு முகாம் இன்று தனியார் மண்டபத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், இந்த கலைஞரின் வரும் முன்காப்போம் சிறப்பு முகாம் கிராமங்கள் தோறும் நடைபெற உள்ளது. இதனை அனைத்து பொதுமக்களும் பயன்பெற்று கொள்ள வேண்டும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, பாக்கியலீலா ஆகியோர் முன்னிலை வகித்தார். மருத்துவ துறை சார்பில் கருங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி, சித்த மருத்துவர் செல்வகுமார், மருந்தாளுனர் வெங்கடேசன், பணியாளர் மேரி, காங்கிரஸ் வட்டாரத்தலைவர் புங்கன் உள்பட கட்சியினர், ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


