கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரியில் பனை சார்ந்த பொருட்களை மதிப்புக்கூட்டுவது குறித்த பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் விவசாயிகளுக்கு பனை சார்ந்த பொருட்களை மதிப்புக்கூட்டுவது குறித்த பயிற்சி நடைபெற்றது. வேளாண்மைக் கல்லூரி முதல்வர் க.இறைவன் அருட்கனி அய்யநாதன் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். தோட்டகலைத்துறை தலைவர் பியூலா வரவேற்றார். புதுச்சேரி சுதேசி இயக்கத்தின் தலைவர் குமரி நம்பி பனையின் பயன்பாடுகளை குறித்தும், பனை சார்ந்த பொருட்களின் தரத்தை எப்படி பாரம்பரிய முறையில் உயர்த்தலாம் என்பது குறித்தும் எடுத்தரைத்தார். தோட்டக்கலைத் துறை சார்பில் பனை மற்றும் பனை சார்ந்த பொருட்களை மதிப்புக் கூட்டுவது குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை பேராசிரியர்கள் ரவீந்திரன், ரிச்சார்டு கென்னடி , நுண்ணிளிரியல் துறை பேராசிரியர்கள் சபரிநாதன், உணவு பதப்படுத்தல் துறை உதவி பேராசிரியர் டேவிட் ஆகியோர் தொழில்நுட்ப பயிற்சி அளித்தனர்.


