ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா இன்று மாலை ஆறாம்பண்ணை தர்காவில் இருந்து யானை மூலம் கொடி எடுத்து அனைத்து தெருக்களிலும் யானை ஊர்வலமாக சென்று மீண்டும் தர்காவில் வந்து கொடி இறக்கப்பட்டது.
அதன் பின்னர் நேச்சை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர், இப்ராஹிம் கனி, சாகுல் அமீது, அமீன் அன்சாரி, மஸ்தான், சேக் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கந்தூரி ஏற்பாடுகளை சிந்தா தர்கா நிர்வாகிகள் செய்திருந்தனர்.


