
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளியில் இன்று இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் கிராமங்கள் தோறும் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து நாட்டுப்புற கலைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் கிராம பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பள்ளி செயலர் முத்தையா, கல்வி அபிவிருத்தி சங்க செயலர் சண்முகநாதன், தொடக்கபள்ளி தலைமை ஆசிரியை ராணி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன், வரலாறு ஆசிரியர் மாணிக்கம் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை பிச்சம்மாள் நன்றியுரையாற்றினர்.