செய்துங்கநல்லூரில் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 58வது பிறந்தநாள் விழா ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஜாரில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் ஒன்றியச் செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏழை எளியவர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில அணி இனை செயலாளர் பூலோகப்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கொம்பையா, ஊராட்சி செயலாளர் திருவரங்கம், மாவட்ட மாணவர் அணி இனை செயலாளர் மருதவிநாயகம், ஒன்றிய கவுன்சிலர்கள் பேச்சிமுத்து, எண்ணாயிரத்தான், ஒன்றிய பாசறை செயலாளர் சுப்பிரமணி, ஊராட்சி செயலாளர்கள் கணிபாய், பேச்சிமுத்து, முருகன், பிச்சைகண்னு, கிளை செயலாளர்கள் ஐயப்பன், முருகன் சரவணன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


