சாத்தான்குளம் அருகே மினிபஸ் – லாரி மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவிகள் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை வழியாக திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்த மினிபஸ், தட்டாா்மடம் – புத்தன்தருவை சாலையில் தருவைகுளம் பகுதியில் முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராமல் மோதியதாம்.
இதில். மினிபஸ்சில் பயணித்த இடையன்குடியைச் சேர்ந்த ஜாண்சன் மகள் புஷ்பா (17), தேவ இரக்கம் மகள் செருபா உள்பட சில மாணவிகள் காயமடைந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மாணவி புஷ்பாவின் தாயாா் அனிதா (37) அளித்த புகாரின் பேரில், தட்டாா்மடம் காவல்துறை வழக்குப்பதிந்து மினிபஸ் ஓட்டுநர் சக்திவேலைத் தேடி வருகின்றனர்.


