தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் மதுரம், முன்னாள் துணைத் தலைவர் ராஜா சுப்பிரமணியன், முன்னாள் பொருளாளர் கோதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அனைத்துத் துறை அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; புதியதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளில் பணியாளர்களுக்குச் சென்னை மாநகராட்சியைப் போன்று நகர ஈட்டுப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில துணைத் தலைவர்கள் சோ்ந்தையன்பிள்ளை, ஜெயக்குமார், பொதுச் செயலர் மோகன், பொருளாளர் மேகநாதன், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சந்தனராஜ், ஆறுமுகராஜ், அந்தோணி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.