கோவில்பட்டி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த கரிசல்குளம் வடக்கு தெரு ராமசாமி மனைவி மகாலட்சுமி(45). இவா் துறையூா் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை அருகேயுள்ள சாலையில் நின்று கொண்டிருந்த போது, மோட்டாா் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மா்ம நபா்கள், மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துச் சென்றுவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கொப்பம்பட்டி போலீசார் மகாலட்சுமியிடம் விசாரித்த போது, அவா் அணிந்திருந்தது கவரிங் செயின் என்பது தெரியவந்தது. இருப்பினும் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சபாபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் பாா்வையிட்டு விசாரித்து வருகின்றனா்.


