நாலுமாவடியில் ரெடீமர்ஸ் கோப்பைக்கான முதல் நாள் போட்டியில் பிள்ளையன்மனை, தூத்துக்குடி, ரெடீமர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனமும், புது வாழ்வுச் சங்கமும் இணைந்து நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டு மைதானத்தில் ரெடீமர்ஸ் கோப்பை மாவட்ட அளவிலான மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.
முதல்நாள் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ், மின்வாரிய உதவி பொறியாளர் பாக்கியராஜ், சகோதரர் மோகன் சி.லாசரஸ் ஆகியோர் கலந்து கொண்டு வீர்ர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். முதல் நாள் போட்டியில் பிள்ளையன்மனை, தூத் துக் குடி, ரெடீமர்ஸ் அணி கள் வெற்றி பெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ஊழியப்பொதுமேலாளர் செல்வக்கு மார், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்த குமார், ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


