திருச்செந்தூரில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (34). இவர் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி தனது இடது கையில் பிளேடால் வெட்டியுள்ளார்.
பின்னர் பெற்றோர் திருமணம் செய்து வைப்பதாக கூறி சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் தனது கழுத்தில் பிளேடால் வெட்டிக் கொண்டும், சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டும் தற்கொலை செய்து கொண்டுல்ளார். சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


