தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 14 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது. இன்று 25 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை கரோனாவில் இருந்து 55 ஆயிரத்து 621 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 408 ஆக உள்ளது.


