தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சாத்தான்குளம் புளியடி மாரியம்மன் திருக்கோவில் கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த வருட கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி திருக்கோவில் கொடி பட்டத்தை யானை மூலம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தது. பின்னர் வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க திருக்கோவிலில் கொடியேற்ற நிகழ்வு வெகு விமர்சியாக நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


