
திருநெல்வேலி பாளையங்கோட்டை சாந்திநகர் போலீஸ் குடியிருப்பை அப்துல் காதர் (27). இவரை கடந்த 15ம் தேதி இரவு பாளையங்கோட்டை கேண்டின் அருகே உள்ள ஒரு இடத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடியது. இது தொடர்பாக போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்துல் காதரின் அண்ணன் போலீஸ்காரராக உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை மேற்கொண்டதலில், கடந்த ஜீன் மாதம் 10 ம் தேதி சாத்தான்குளத்தில் பைனான்சியர் மார்ட்டின் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தல் அப்துல்காதரும் உள்ளார். இதன் காரணமாக மார்ட்டினின் உறவினர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்ந நிலையில் இன்றைய தினம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்லப்பா, குமாரகிரியைச் சேர்ந்த பாலமுருகன், ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த மாதேஸ்வரன், தூத்துக்குடி திருவிக நகரைச் சேர்ந்த காளியப்பன் என்ற காடை ஆகிய நான்கு பேரும் ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்களை விசாரித்த நீதிபதி அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.