திருச்செந்தூரில் நர்சிங் கல்லூரி மாணவி திடீரென தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு, கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் வேதமாணிக்கம். இவரது மகள் ஜெனிபர் (20), திருச்செந்தூரில் உள்ள கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று அவர் வீட்டில் இருந்தபோது திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறிதது திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.


