தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 7ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல் வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் அனைத்து வட்டாரங்களை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் உதவி உபகரணங்களை பெற தேர்வு செய்வதற்கு மதிப்பீடு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிடவும் மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அமலாக்கத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ALIMCO (Artificial Limbs Manufacturing Corporation of India) மூலம் கை மற்றும் கால்கள் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், சிறப்பு குழந்தைகளுக்கான நடமாடும் வாக்கர், சிறப்பு குழந்தைகளுக்கான சக்கர நாற்காலி CP Chair, முட நிக்கு சாதனங்கள் மற்றும் செயற்கை அவயங்கள், கால்கள், மனவவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி உபகரணங்கள்(MSIED Kit),
தொழுநோயால் பாதிக்கப்பட்டோர்களுக்கான தினசரி பயன்பாட்டு உபகரணங்கள் மற்றும் செல்பேசி(ADL Kit & Cell Phone, பார்வையற்றவர்களுக்கான ஸ்மார்ட் /போன், பார்வையற்றோருக்கான நவீன அதிரும் மடக்கு குச்சி, காது கேளாத வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன காது கருவி போன்றவை வழங்குவதற்கான பரிசோதனையும் தேர்வும்,
தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் , பயிற்சிகள் ,வேலைவாய்ப்பு , சிறப்புப்பள்ளி சேர்க்கை , பராமரிப்பு உதவித்தொகை , கல்வி உதவித்தொகை , மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி, இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID) பெறாத பயனாளிகள் தேவையான ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மாற்றுத்திறனாளிகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் குடும்ப அட்டை மற்றும் அதன் நகல் , ஆதார் அட்டை மற்றும் அதன் நகலுடனும் மற்றும் மத்திய அரசின் திட்டத்தில் மேற்காணும் உபகரணங்கள் தேவைப்படுவோர் தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நகல், வருமானச் சான்று மற்றும் உடன் கீழ்காணும் விபரப்படி நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். முகாம் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் .
திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியைச் சார்ந்தவர்களுக்கு
15.09.2021 சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில்
பொதுமக்கள் அனைவரும்
இதில் கலந்துகொள்ளும் படி கருங்குளம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் இசக்கிப்பாண்டியன் தெரிவித்துள்ளார்


