தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் காடல்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. செல்லத்துரை தலைமையிலான போலீசார் இன்று (15.08.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூதலாபுரம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் மாரிமுத்து (27) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து காடல்குடி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி. கலா வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 1கிலோ 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


