எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவரை இழிவுபடுத்தியும், வன்முறையை தூண்டும் வகையில் வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டு பரப்பிய இளஞ்சிறார் உடனடியாக கைது – சாதி, மத கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டதில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரிக்கை
எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் இன்று ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவரை பற்றி இழிவுபடுத்தியும், இருவேறு சமுதாயங்களுக்கிடையே வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ ஒன்றை தனது வாட்ஸ் ஆப் மூலம் குழுக்களில் பரப்பியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களுக்கு உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் எட்டயாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜின்னா பீர்முகமது அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. முருகன் ஆகியோர் அடங்கிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர், ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவரை இழிவுபடுத்தியும், சமுதாய வன்முறையை தூண்டும் வகையில் வீடியோவை வாட்ஸ் ஆப்பில் பரப்பியது தெரியவந்தது, உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று சமுதாயத் தலைவர்களை இழிவுபடுத்தி சாதி, மதக் கலவரங்கள தூண்டும் வகையில் வன்முறையான செய்திகளையோ, புகைப்படங்களையோ மற்றும் வீடியோக்களையோ சமூக வலைதளங்களில் யாராவது பதிவிட்டு பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


