நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையார்குளம் கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு தனியார் சோலார் நிறுவனத்தில் கடந்த 12.07.2021 அன்று, ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (எ) தோல்மூட்டை மகன் சுப்பையா (எ) சுரேஷ் (31), அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் இசக்கி (29), வெள்ளூர் வண்டிமலைச்சியம்மன் கொவில் தெருவை சேர்ந்த தளவாய் மகன் சுபாஷ் (22) மற்றும் தெற்கு காரசேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து (29) ஆகியோர் உட்பட 10 பேர் மேற்படி நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து அங்குள்ளவர்களிடம் தகராறு செய்து நிறுவன வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களையும், நிறுவனத்தின் 69 சோலார் பேனர்களையும் கற்களால் சேதப்படுத்தி உள்ளனர்.
இதனை தட்டிகேட்ட அந்நிறுவனத்தின் வாட்ச்மேனாக பணிபுரியும் உடையார்குளம் பகுதியை சேர்ந்த இனாமுத்து மகன் சங்கரசுப்பு என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பையா (எ) சுரேஷ், இசக்கி, சுபாஷ் மற்றும் இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தனர். மேற்படி வழக்குகளின் முக்கிய குற்றவாளிகளான காளிராஜ், மற்றும் சுப்பையா (எ) சுரேஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.


