தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் முத்து மகன் மணிகண்டன் (42). பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 1ஆண்டுகளுக்கு முன்னர் சாத்தான்குளம் தச்சமொழி தெருவைச் சேர்நத ஆறுமுகம் மகன் கிருஷ்ணன் (40). என்பவருக்கு ரூ2லட்சம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை அவர் திரும்ப கொடுக்கவில்லையாம் மணிகண்டன் பணத்தை கேட்டு வந்ததில் அவர்களுக்குள் பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் மணிகண்டன், கிருஷ்ணனிடம், பணத்தை கேட்டதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மணிகண்டன் கோவை சென்று விட்டாராம். இந்நிலையில் கிருஷ்ணன், அவரது நண்பர்கள் கிதியோன், சிறப்பூரைச் சேர்ந்த செல்வக்குமார் ஆகியோர் மணிகண்டனை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர் இல்லாததால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் உள்ளிட்ட 3பேரும் மணிகண்டன் வீட்டு கண்ணாடி மற்றும் வீட்டு முன் நிறுத்தி இருந்த லோடு ஆட்டோ கண்ணாடி ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றுவிட்டனராம். இதுகுறித்து மணிகண்டன் சகோதரர் மோகன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கிருஷ்ணன் உள்ளிட்ட 3பேரும் மீது உதவி ஆய்வாளர் அருள்சாம்ராஜ் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.


