ஆழ்வார்திருநகரி அருகே அனுமதியின்றி எம்.சாண்ட் எடுத்துச் சென்ற மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி புவியியல் மற்றும் சுங்கத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுப்பையா தலைமையிலான புவியியல் மற்றும் சுங்கத்துறை குழுவினர் நேற்று (12.08.2021) ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் எவ்வித அனுமதியுமின்றி எம்.சாண்ட் எடுத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புவியியல் மற்றும் சுங்கத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுப்பையா அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஜுடி வழக்கு பதிவு செய்து அந்த மினி லாரியின் ஓட்டுநரான பொன்னன்குறிச்சி பகுதியை சேர்ந்த அரிச்சந்திரன் மகன் செல்வராஜ் (35) என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 1 யூனிட் எம்.சாண்ட் மற்றும் மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.


