தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி தென்பாகம், சிப்காட், திருச்செந்தூர், ஆறுமுகநேரி, செய்துங்கநல்லூர், பசுவந்தனை, புதூர், மாசார்பட்டி, குளத்தூர், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 11 காவல் நிலைய போலீசார் நேற்று தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 14 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 77 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


