தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஶ்ரீவைகுண்டம் அணையின் மூலம் பாசன வசதி பெறும் சிவத்தையாபுரம் பேய்குளம் ஆறுமுகமங்கலம் கொற்கை குளம் பழையகாயல் குளம் ஆகிய குளங்களில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகள் மற்றும் காட்டுச் செடிகளை அப்புறப்படுத்தி குளங்கள் அனைத்தையும் தூய்மை படுத்த வேண்டி மனு கொடுக்கப்பட்டது.
சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன் தலைமையில் மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார் துணைச் செயலாளர் அருள்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் பிரதிநிதிகள் வின்சென்ட் பழனிவேல் இளைஞரணி துணைச் செயலாளர் முத்துக்குமார் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பாரத் மாநகரச் செயலாளர் உதயசூரியன் துணைச் செயலாளர் மதியழகன் உள்பட பலர் உடன் சென்றனர்.


