குலசேகரன்பட்டினத்தில் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி சிறுமியைக் கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், தனது பாட்டி வீட்டில் இருந்துவந்தாராம். இதனிடையே, அவா் திடீரென காணாமல்போனாராம்.
புகாரின்பேரில் குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி விசாரணை நடத்தி, சாத்தான்குளம் அண்ணா நகரைச் சோ்ந்த க. மாணிக்கம் (22) என்பவரைக் கைது செய்தனா். மாணிக்கம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி சிறுமியைக் கடத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் போக்சோ சட்டத்தில் அவரைக் கைதுசெய்து சிறையிலடைத்தனா்.


