வல்ல நாடு சாது சிதம்பர சுவாமிகள் துவக்கி அருளிய அமாவாசை ஜோதி வழிபாட்டு ஸ்தலங்கள் 7 உள்ளது. அதில் ஐந்தாவது ஜோதி வழிபாடு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐவர் மலையில் உள்ளது. பழனியிலிருந்து 22 கி.மீ தொலைவில் பாப்பம்பட்டி அருகில் உள்ள அருள் நீ உண்மை மலையில் அமாவாசை ஜோதி ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றி அகவல் பாராயணம் பாடினர். அதன் பின் ஜோதி ஏற்றி 19 சுற்று சுற்றி வந்தனர். பின் அனைவருக்கும் கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பின் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளைத் தொண்டர் குலத்தினர் செய்திருந்தனர்.


