செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா சுந்தர் தலைமையிலான போலீசார் (09.08.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் பாலம் ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள முட்புதரில் கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ஜெயக்குமார் (24) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாசுந்தர் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார் என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 1கிலோ 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


