கருங்குளம் வட்டார விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பாரம்பரிய நெல் இரகம் மற்றும் சாகுபடி தொழில் நுட்பம் குறித்த பயிற்சி இணைய தளம் மூலமாக நடந்தது.
கருங்குளம் வட்டாரம் வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பாரம்பரிய நெல் இரகம் மற்றும் சாகுபடி தொழில் நுட்பம் குறித்த பயிற்சி இணைய தளம் மூலமாக வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் வரவேற்றார். உழவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் புவனேஸ்வரி இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய்கள் இயற்கை முறையில் கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கான தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினார். உழவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் சோமசுந்தரம் பாரம்பரிய நெல் இரகம் மற்றும் அதன் குணாதிசயங்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து விவசாயிகளுக்கு இணைய தள வாயிலாக விளக்கமாக எடுத்துரைத்தார். பயிற்சியில் 40 விவசாயிகள் இணைய தள வாயிலாக கலந்துகொண்டனர். கருங்குளம் வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவி தொழில் நுட்ப மேலாளர் பகவதி குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


