சிவகளையில்
ஓரே குழியில் 16 முதுமககள் தாழிகள்
அகழாய்வு ஆர்வலர்கள் உற்சாகம்
சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரமடைந்துள்ளது. அகழாய்வு பணியில் இதுவரை 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிககப்பட்டது. அகழாய்வு பணிக்காக 15 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. ஆய்வில் அபூர்வமாக ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதல் கட்ட அகழாய்வு பணியும் துவங்கியது.
இந்த பணியானது தொடர்ந்து 4 மாத காலமாக நடைபெற்று வருகிறது. சிவகளை அகழாய்வு பணி அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணிக்காக 15க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவகளை அகழாய்வு பணியை பொறுத்தவரை 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் சிவகளை பரம்பு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முதுமக்கள் தாழிகளில் 5 முதுமக்கள் தாழிகள் மூடியுடன் உள்ளது. 10 முதுமக்கள் தாழிகள் பெரிய அளவில் பிரம்மாண்டமாக உள்ளது. ஒவ்வொரு முதுமக்கள் தாழிகளும் 2 அடி முதல் 4 அடி வரை உயரமாக காணப்படுகிறது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் பானைகளும், பானை ஓடுகளும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகளை அகழாய்வு பணியில் தாமிரபரணிக்கரை நாகரீகத்தை கண்டறிவதற்காக முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளையும் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அகழாய்வு அதிகாரிகளும், ஆர்வலர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


