தீராத்திகுளத்தில் முழு ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீராத்திகுளம் மணிமுத்தாறு கால்வாய் மடை அருகே கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேரகுளம் காவல் உதவி ஆய்வாளர் அல்லி அரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மீரான்குளம் மெயின் ரோடு பகுதியே சேர்ந்த இசாக் மகன் மான்சிங் (30) என்பவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


