விட்டிலாபுரம் வாக்குச்சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடிர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அனைத்து வாக்குச்சாவடிகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளையும், அதிக வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளையும் நேரில் பார்வையிட்டு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள விட்டிலாபுரத்தில் உள்ள 5 வாக்குச்சாவடிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் வாக்குச்சாவடி குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதில் செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர், உதவி காவல் ஆய்வாளர் அந்தோணி திலிப், முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, விட்டிலாபுரம் கிராம உதவியாளர் சூசையம்மாள், முத்தாலங்குறிச்சி கிராம உதவியாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


