கோபாலசமுத்திரத்தில் பொதுமக்கள் 100 சதவீத வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் சேரன்காதேவி சார் ஆட்சியர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் படி இந்திய தேர்தல் ஆணையம் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து வருகின்ற தமிழக அரசு சட்டமன்ற தேர்தலில் முதல் தலைமுறை இளம் வாக்காளர்கள் வாக்களிப்பது மற்றும் பொதுமக்கள் 100% வாக்களிப்போம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது.
நிகழ்ச்சியை திருநெல்வேலி உதவி ஆட்சியர் (பயிற்சி) மகாலெட்சுமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சீதாலெட்சுமி முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்புரை ஆற்றினார். நல்நூலகர் முத்துகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, கிராம உதயம் தனி அலுவலர் ரேவதிகுமாரி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.