பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு சூடம் காட்டி செய்துங்கநல்லூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல், கேஸ் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஜாரில் பெட்ரோல், டீசல், கேஸ் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ராமசந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் மாரியப்பன் கண்டன உரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் சிலிண்டருக்கு சூடம், பத்தி, சாம்பிராணி காட்டப்பட்டு கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன், விட்டிலாபுரம் கிளை செயலாளர் வண்டிமலையான், விவசாய சங்க ஒன்றியகுழு நடராஜன், ஊரக உள்ளாட்சிதுறை சுடலைகண்ணு, கொங்கராயகுறிச்சி கிளைசெயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


