கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது.
தமிழக வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து அலுவலகங்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் நான்கு கட்ட போராட்டங்களை அறிவித்தனர்.
இதன்படி ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலக அலுவலர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அலுவலர்கள் ஏதுமின்றி தாலுகா அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் பல்வேறு சான்றிதழ்கள் வேண்டி தாலுகா அலுவலகம் வந்து செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


