எட்டா கனியாக இருந்த மருத்துவ படிப்பை அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்கியது எடப்பாடி அரசு. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் மாணவ மாணவிகள் மத்தியில் பேச்சு.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு வங்கி நிதி உதவியில் ரூபாய் 1.52 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தினை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அதன்பின்னர் அவர் பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் முன்னிலையில் பேசுகையில்,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு தொடர்ந்து 10 ஆண்டுகளாக இலவச மடிக்கணினி மாணவ மாணவிகளுக்கு வழங்கி வருகிறது. அரசு பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவ படிப்பை வழங்கியது தற்போது உள்ள எடப்பாடி அரசு. இந்தாண்டு மட்டும் அரசு பள்ளிகளில் இருந்து 400 மாணவ மாணவிகள் மருத்துவராகி உள்ளனர். தற்போது உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார். தற்போது உள்ள முதல்வருக்கு தொடர்ந்து நீங்கள் ஆதரவை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


