வல்லநாடு திடலில் இன்றைய தினம் விவசாயம் மற்றும் குறுதொழில் சார்ந்த கண்காட்சி நடந்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், வல்லநாடு பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர்.
இந்த கண்காட்சியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர் மற்றும் விவசாய பயன்பாட்டு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதே போல் இரட்டைத்திருப்பதி சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் இயற்கையான முறையில் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அதே போல் பனை ஓலையால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை கள இயக்குநர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


