செய்துங்கநல்லூரில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடந்தது. செய்துங்கநல்லூர் துணை சுகாதார நிலையத்தில் வைத்து நடந்த இந்த முகாமுக்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். டாக்டர் ஆயிஷா, டாக்டர் கிஷோர், சுகாதார ஆய்வாளர் சண்முகப்பெருமாள், கிராம சுகாதார செவிலியர் விவேகானந்த விஜயா மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் ஏராளமான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.


