கருங்குளம் வட்டார அளவில் செய்துங்கநல்லூர் யூனியன் அலுவலகத்தில் வைத்து குழந்தைகள் வளர்ச்சி திட்டம் கருங்குளம் வட்டாரமும், தூத்துக்குடி மாவட்ட சைல்டு லைன் குழுவும் இணைந்து தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் உணவு, ஊட்டச்சத்து, சுத்தம், சுகாதாரம், என்ற தலைப்பில் வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் பங்குபெற்று வெற்றி பெற்ற 100 குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜுன்னிசா பேகம், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், சமூக நல விரிவாக்க அலுவலர் பாக்கியலட்சுமி, மேற்பார்வையாளர்கள், போஷான் அபியான் பணியாளர்கள், சைல்டு லைன் குழுவின் அருண்குமார், சங்கரேஸ்வரி, கார்த்தி, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வின் நிறைவில் குழந்தைகள் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.


