தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் பகுதியில் கனிமவளத்துறை உதவி இயக்குநர் வீரலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில் அதில் அனுமதிச்சீட்டு இல்லாமல் சரள்மணல் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து லாரியை வீரலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் உதவி காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தார். மேலும் இதுகுறித்து காவல் ஆய்வாளர் ராஜசுந்தர் விசாரனை மேற்கொண்டு வருகிறார்.


